நல்லதோர் வீணை செய்தேன் டீஸர்:

“ரெட் பேபி ப்ளீஸ் பேபி… நான்… நான் பண்ணது ரொம்ப ரொம்ப தப்புதான் நான் ஒத்துக்குறேன்

ப்ளீஸ் என்ன.. 

என்ன ?? வேணாலும் பண்ணு ப்ளீஸ் பேபி என் மேல இருக்குற கோபத்தை பாவம்  பச்சை குழந்தை மேல காட்டாத

இப்ப… இப்ப என்ன உனக்கு நான் நம்ப பாப்பாவ தொடக் கூடாது இல்லையா சரி நான் தொடல… ப்ளீஸ் என்ன பழி வாங்குறதா நினைச்சி குழந்தைய பலியாக்கிடாத” யாரிடம் பேசுவது அசிங்கம் என கருத்தினானோ யாரை பழி தீர்க்க விரும்பினானோ அவள் முன்னே மண்டியிட்டு அவளிடம் தன் காதலை வேண்ட….  எந்த குழந்தையை வேண்டாமென்று ஒத்துக்கினானோ  அதை தன் கையில் தாங்கி

தன் உயிருக்கு உயிரானவளிடம்  தன் குழந்தைக்கு தான்…. தான் தக்கப்பன் என்னும் அங்கீகரத்திற்காக போராடிக்கொண்டிருந்தான் ஆர்னவ் வர்மன்… அவன் கையில் தாங்கிக் கொண்டிருந்த அவனது மகளோ பசியில் வீற்றிட்டுக் கொண்டு அழ…

“பேபி ப்ளீஸ் பேபி ஏதாவது பேசு பேபி…. நீ இப்படி இருக்குறது எனக்கு பயமா இருக்கு பேபி…. பேபி பாப்பா அழறா  அவளை முதலில் கவனி பேபி…

அப்புறம் என்கூட வந்து சண்டை போடு பேபி ப்ளீஸ்” அவள் மகள் அழுவது அவளாளும் பொறுக்க முடியவில்லை தான்… ஆனாலும் அவள் கணவன் செய்ததை அவளாள் மன்னிக்க முடியவில்லை…

மகளின் கதறல் அழுகை அன்னையின் நெஞ்சில் பாலமுதை சுறக்க அவள்  மார்பு சேலையை மீறி மேலாடை நினைந்து அவளுக்கு வலியெடுத்தது…. அதை உணர்ந்த ஆர்னவ் தன் கையில் இருந்த பூக்குவியளை தன் மனைவிக்கு அருகில் கிடத்தியவன்….

கலங்கிய கண்களோடு அங்கிருந்து நகர்ந்தான்….  அழுதுக் கொண்டிருந்த அவர்களது மகள் தொண்டை வறண்டு நுனி மூக்கு சிவந்திருக்க… தன் மகள் அழுவதை தாளாமல் அவள் பக்கம் திரும்பிய செவ்வந்திக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது… தன் கணவன் செய்தது பிழை தான் இல்லை என்பதற்கில்லை

ஆனால் அவன் மீது உள்ள கோபம் மகள் மீது திரும்பிவிட்டதே… ஒரு மனைவியாக அவள் கணவனை தண்டிக்கலாம் ஆனால் ஒரு அன்னையாய் பார்க்கும் போது இது மிக பெரிய தவறு என்று புரிய

பசியில் துடித்துக் கொண்டிருந்த மகளை வாரியணைத்து தன் மார்போடு அழுத்தியவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்…குழந்தையை தன் மடியில் கிடத்தி தன் சேலை மாராப்பை நீக்கி ரவிக்கையை சற்று விலக்கி குழந்தைக்கு பாலூட்ட

பசியில் அழுத அந்த சின்ன சிட்டு தன் தாய் மார்பின் அமுதம் அறிந்து வேக வேகமாக அருந்தியது… செவ்வந்தி தன் மகளை அள்ளியெடுத்து முத்தமிட்டு சமாதானம் செய்ய பசியின் மயக்கமோ இல்லை அழுத்துக் கொண்டிருந்த தாக்கமோ இல்லை தன் அன்னையிடம் பாதுகாப்பாக அடைக்கலமானதோ

அவர்கள் மகள் விரைவில் உறங்கிவிட அருகில் இருந்த தொட்டிலில் குழந்தையை கிடத்திய ஆர்னவ் அவள் அருகில் வந்து நின்றான் … மகள் உறங்கிவிட்டதை உணர்ந்து தன் மனைவியிடம் திரும்பியவன்

“ரெட் பேபி… என் மேலுள்ள கோபம்  உனக்கு போக நான் என்ன செய்யணும்… சொல்லு நான் செய்யுறேன்” அவன் பேச்சிக்கு பதில் இல்லாமல் அவள் அவனை கடந்துப் போக அவள் கையை எட்டிப் பிடித்து இழுத்தவன்

கண்களால் இரைஞ்சி ” ப்ளீஸ் சொல்லு பேபி… என்னால உன்ன புரிஞ்சிக்க முடில பேபி… என்னோட செயல், உரிமை எல்லாமே உன்னளவில் மட்டுமேன்னு நீ சொன்னது பொய்யா

சொல்லு பேபி”

அவனை கலங்கிய விழிகளால் பார்த்தவள் “இப்பவும் சொல்றேன் உங்களோட எல்லாம் உணர்வுகளுக்கு என் அளவில் மட்டுமே உரிமை ஏனா நான் உங்களுக்கு வேலைக்காரி… படுக்கையில் மனைவியாயுள்ள விபச்சாரி… இது எதுவுமே மாறாது ஆனா ஒன்றை தவற

எந்த பொண்ணாளையும் ஏத்துக்க முடியாதது ஜீரணிக்க முடியாத விஷயம் அவள் கற்பை சந்தேகப்படுறது… என் மேல் சந்தேகப்பட்டதைக் கூட நான் பெருசா நினைக்கல அது ஆம்பளைங்க புத்தினு நினைச்சிட்டு போயிடுவேன்

ஆனா இந்த குழந்தையை” அதற்கு மேல் வார்த்தை வரவில்லை நெஞ்சில் ஏதோ சுமக்க முடியாத பாரம் சுமை தாங்கியாக நெஞ்சை கனக்க கண்ணீரோடு நின்றவளைப் பார்க்க ஆர்வனின் தலையில் யாரோ சம்மட்டியால் அடித்ததுப் போல் வலித்தது… அன்று அவளுக்கு வலிக்க வேண்டும் என்று கூறிய வார்த்தை இன்று அந்த வார்த்தையே அவனுக்கு எமனாக அமைந்தது

இலக்கு மாறி அவனையும் சேர்த்தல்லவா குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது… அன்றைக்கு கோபத்தில் விட்ட வார்த்தை இன்று அவனுக்கே எதிரியாக மாறியது

மனது குற்ற உணர்வில் குறுகுறுக்க தன்னவளை நெருங்கிய ஆர்னவ் ” பேபி… நான் உன்னை  அந்த மாதிரி சொன்னதுக்கு உன்கிட்ட நான் பல தடவை மன்னிப்பு கேட்டுட்டேன்… நான் இப்போ புது ஆர்னவா மாறிட்டேன்.. இப்போ என் மனைவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அப்புறம் நம் மகளை” அவள் முகத்தை கையில் ஏந்தி அவளின்  நெற்றியில் இதழ் பதிக்க… அவனிடமிருந்து விலகிய செவ்வந்தி தன் கணவனை நேராகப் பார்த்து

உதட்டில் வலி நிறைந்த புன்னகையை சுமந்து ” இல்ல சார்… நமக்குள்ள இருக்குற இந்த உறவுக்கு என்ன பேருன்னு இன்னும் எனக்கு புரியல… தெளிவுமில்ல

முறிந்த உறவை ஓட்டவைக்க முயற்சிக்காதீங்க” உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் கண்களால் சுட்டிக் காட்டியவள் ” அவள் என்னோட மகள் உங்கள் மகள் இல்லை… நீங்கள் என்  மகளுக்கு எந்த வகையிலும் தகப்பன் ஆகமுடியாது…

நீங்க சொன்னதுப்போல இது தப்பான முறையில் வந்த குழந்தைதான்” இதுவரை பொறுமையாக இருந்த ஆர்னவால் கடைசி வார்த்தைக்கு பொறுமைகாக்க முடியவில்லை

செவ்வந்தி என்று உரக்க கத்தியவன் கையை ஓங்கிவிட்டான்… கண்கள் ரத்தமென சிவந்திருக்க தன் கோபத்தை பல்லை கடித்துக்கொண்டு அடக்கியவன் நீண்ட நெடு மூச்சு ஒன்றை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து “ஹ்ம்ம் நீ சொன்னாலும் சொல்லலனாலும் அவ என்னோட மகள் தான்… என் மேல உனக்கு கோபம் இன்னும் போலனா என்ன எவ்ளோ வேணாலும் அடி திட்டு ஆனா என்னை பழி வாங்குறதா நினைச்சு உன்ன நீ அசிங்கப்படுத்திக்காத

அது உனக்கு மட்டும் அசிங்கமில்ல எனக்கும் சேர்த்துதான்” அவள் கன்னத்தை தட்டிவிட்டு சென்றவன் பின் திரும்பி நின்று அவள் என்னோட மகள் தான் என்பதற்கு எனக்கு எந்த ஆதாரமும் வேண்டாம் ஏனென்றால் என்னைப்போலவே தான் என் மகள் என்று கூறிய வார்த்தையில் வெடுக்கென்று நிமிர்ந்த தன் மனைவியை புன்னகை விரிய பார்த்தவன் கண்ணடித்து ஜாடையில் என்று கூறி விடைப்பெற்றான்…

வீணை மீட்டும்…



Published by diyalaxmi novels

writer

2 thoughts on “நல்லதோர் வீணை செய்தேன் டீஸர்:

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started